ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஏப்ரல் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
01:11 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேருக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை எல்லைத் தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதையடுத்து கைதான மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Advertisement
வழக்கை விசாரித்த நீதிபதி, 11 மீனவர்களுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement