ராம நவமி : அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
10:35 AM Apr 06, 2025 IST
|
Murugesan M
ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Advertisement
மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமரின் பிறப்பை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ராம நவமி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், சைத்ர நவராத்திரியின் 9ஆம் நாளில் வரும் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Advertisement
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில், மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ராமர் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
Advertisement