ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பு!
ரிசர்வ் வங்கியின் 26-ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.
ஆர்பிஐ ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பணி ஓய்வுபெற்ற நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.
இதைத்தொடர்ந்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாக வைத்தே ரிசர்வ் வங்கி செயல்படும் என்றும்,
பொது நலனை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 1990-ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, நிதியமைச்சகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் எட்டு முறை பட்ஜெட் தயாரிப்பில் பங்கு வகித்திருக்கிறார்.
15-ஆவது நிதிக்குழு உறுப்பினராகவும், ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் தூதராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.