திருச்சி திருவெறும்பூர் அருகே உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியமங்கலத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர், காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உடலில் காயத்துடன் விழுந்து கிடந்தார்.
அவரை மீட்ட அப்பகுதியினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தா, கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.