ரிஷப் பண்ட்- ன் மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் வர்ணனையாளர் விரக்தி!
06:04 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட்-ன் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் டிவியை உடைத்ததால் சக வர்ணனையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டிக்குப் பிறகு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இது குறித்துப் பேசிய வர்ணனையாளர் ஒருவர், ரிஷப் பண்ட்-ஐ எப்போதுமே நம்ப முடியாது எனக் கோபமாகத் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பின்னால் ஓடிக்கொண்டிருந்த டிவியையும் அவர் உடைத்தார். இதனால் நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த சக வர்ணனையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement