செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த்!

11:21 AM Nov 25, 2024 IST | Murugesan M

ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை லக்னோ அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றார்.

Advertisement

18வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான மெகா ஏலம் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது.  இதில், ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.  டெல்லி கேபிடல்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது. யுஸ்வேந்திர சாஹலை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸும், இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரை குஜராத் டைட்டன்ஸ் அணி 15 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

Advertisement

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை டெல்லி கேபிட்டல்ஸ் 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும்,  ககிசோ ரபாடாவை குஜராத் டைட்டன்ஸ் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தன.

இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை டெல்லி கேபிட்டல்ஸ் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டெவான் கான்வே சிஎஸ்கே-வால் 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

Advertisement
Tags :
FEATUREDMAINRs. Rishabh Pant bought for 27 crores!
Advertisement
Next Article