ரெட் அலர்ட் எச்சரிக்கை - வெறிச்சோடிய புதுச்சேரி கடற்கரை!
புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
Advertisement
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
கடந்த மூன்று நாட்களாகவே புதுச்சேரி கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்,
இதனிடையே வார இறுதி நாட்களை கழிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவது வழக்கம். அந்த வகையில் வெள்ளிக்கிழமையான இன்று புதுச்சேரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் பலர் வந்து கடற்கரை சாலையில் நேரத்தை கழித்து செல்கின்றனர்,
ஒரு சிலர் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி கடலில் இறங்கி செல்பி எடுத்தும் விளையாடியும் செல்கின்றனர், ஆனால் வார இறுதி நாள் என்பதால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதாலும் கடற்கரை சாலையில் யாரும் கடலில் இறங்காதவாறு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மீறி கடலில் இறங்குபவர்களை காவல்துறையினர் எச்சரித்து வெளியேற்றி வருகின்றனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.