ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்றும், 10-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
நுகர்வோர் விலைக் குறையீடு நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.5 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்றும், இது ஒரு மிதமான அளவு என்றாலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பருவகால பிரச்னைகள், உலகளாவிய புவி அரசியல் சிக்கல்கள் ஆகியன பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து சவாலாக உள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.