செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்!

10:45 AM Apr 04, 2025 IST | Murugesan M

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பொதுப் போக்குவரத்தைத் தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம், டுமில் குப்பம், முள்ளிமா நகர் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள லூப் சாலையை பொதுப் போக்குவரத்துக்காக மாற்றியதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement

தொடர்ந்து லூப் சாலையில் பொதுப் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் எனக்கூறி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையை மீனவ மக்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Advertisement
Tags :
Fishermen protest on Loop Road!MAINமீனவர்கள் போராட்டம்
Advertisement
Next Article