லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை - கால்பந்தாட்ட வீரர் கைது!
12:48 PM Jan 24, 2025 IST
|
Sivasubramanian P
புதுச்சேரியில் லோன் ஆப் மூலம் கடன் பெற்றவரிடம் அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் கைது செய்யப்பட்டார்.
Advertisement
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் லோன் ஆப் மூலம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்தியுள்ளார்.
ஆனால், கூடுதல் தொகை கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்ததோடு, பணம் தரவில்லை எனில் அவரது நிர்வாணப்படத்தை வெளிடுயிடுவோம் என, லோன் ஆப் நிறுவனத்தைச் சேர்ந்த கால் பந்தாட்ட வீரர் முகமது ஷபி என்பவர் மிரட்டியுள்ளார்.
Advertisement
இது தொடர்பான புகாரின் பேரில், முகமது ஷபியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஷபி மற்றும் அவரது கூட்டாளிகள் 13 பேர் இணைந்து, பலரிடம் 321 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Next Article