செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வக்ஃபு வாரிய வரைவு அறிக்கை ஏற்பு!

12:24 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்றுக்கொண்டது.

Advertisement

வக்ஃபு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் நோக்கில், அதில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத 2 பேரை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது,

வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

அக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், மொத்தம் 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த 14 திருத்தங்கள் ஏற்கப்பட்டன.

எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்த 44 திருத்தங்களும் ரத்து செய்யப்பட்ட சூழலில், டெல்லியில் கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வக்ஃபு வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரைவு அறிக்கைக்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகின.

எதிர்க்கட்சியினர் தங்களது ஆட்சேபத்தை மாலை 4 மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும், அதன் பின்னர் வரைவு அறிக்கை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
amendment in waqf board actbill on waqf boardbill on waqf board powercentre brings bill on waqf boardFEATUREDland grab waqf boardMAINWaqf Boardwaqf board act amendment billWaqf Board Act.waqf board amendmentwaqf board amendment billwaqf board amendment bill 2024waqf board amendment bill in lok sabhawaqf board billWaqf Board Draft Report Accepted!waqf board land grabwaqf board latest controversywaqf board latest newswaqf board property
Advertisement