செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு!

08:35 PM Apr 02, 2025 IST | Murugesan M

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைக் களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

Advertisement

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நன்றி மோடி ஜி என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கையில் ஏந்தி, முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பெருமிதம் கூறினர்.

இந்த சட்டத்திருத்தத்தால் முஸ்லிம் சமுகம் பயனடையும் என்று குறிப்பிட்ட அவர்கள், அரசியல் ஆதாயத்திற்காகச் சிலர் இதை எதிர்ப்பதாகத் தெரிவித்தனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINmadhya pradeshMuslim women gather near Bhopalto support the bill
Advertisement
Next Article