செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வக்பு வாரிய திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்!

05:45 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வக்பு வாரிய திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

Advertisement

வக்பு வாரிய திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வக்பு சட்டதிருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவில் கொண்டுவரப்பட்ட 14 திருத்தங்களை வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, இறுதி வரைவு மசோதா மீது கடந்த 29ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் மசோதா ஏற்கப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் அறிக்கையை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINThe Waqf Board Amendment Bill will be tabled in Parliament tomorrow!
Advertisement