செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

09:56 AM Dec 06, 2024 IST | Murugesan M

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும்,
இந்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும் எனவும் 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
chennai metrological centerFEATUREDheavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamandu rainweather update
Advertisement
Next Article