வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு குறைவு - வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மீண்டும் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது.
கடந்த சில மணி நேரங்களாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் நீடிக்கிறது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 30-ம் தேதி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்று இரவு முதல் மழை படிபடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், நாளை மறுநாள் நாகை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.