செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வங்கக்கடலில் வரும் 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

06:30 PM Dec 13, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

வங்கக்கடலில் வருகிற 16-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வங்கக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வலுவிலக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர்,

Advertisement

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

 

Advertisement
Tags :
FEATUREDMAINheavy rainBalachandranchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centertamandu rain
Advertisement