செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்., பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி ஆர்பாட்டம்!

12:00 PM Dec 04, 2024 IST | Murugesan M

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்.,  பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறையை கண்டித்து  சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில்,  வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழு என்று பெயரில் பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்க கோரி முழக்கங்கள்  எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

இதனை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்.,  பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement
Tags :
All over Tamil Nadu condemned the violence against Hindus in Bangladesh. SSbangaladesh issuebjpFEATUREDHindu Front protest!MAINRSSVishwa Hindu Parishad
Advertisement
Next Article