வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!
வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வங்கத்தில் சிந்துவது ஹிந்துவின் ரத்தமே..!! நம் உறவுகளை காக்க நாம் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்? அந்நிய மதத்தவர் எண்ணிக்கையில் அதிகமானால் வங்கத்தில் இன்று நடப்பது நாளை பாரதத்தில் எங்கும் நடக்கும்..!!
எங்கோ இருக்கும் பாலஸ்தீனுக்காக, லெபனானுக்காக, ஈரானுக்காக இங்கு குரல் கொடுக்கும் மதசார்பின்மைவாதிகள் ஏன் வங்கத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக இதுவரை குரல் கொடுக்கவில்லை?
திராவிட! கம்யூனிஸ! மதசார்பற்ற? அரசியல்வாதிகள் ஹிந்துக்களுக்கு துயரம் நிகழும் போது மட்டும் மெளனம் காப்பது ஏன்? ஹிந்து என்றாலே அவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர்கள் நிருபித்துவிட்டார்கள். வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என ஹெச். ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.