வங்க தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து டிசம்பர் 4-இல் கண்டன ஆர்பாட்டம் : கரு.நாகராஜன் தகவல்!
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கதேச இந்து மக்கள் உரிமை மீட்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கோரி மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது, வங்கதேசத்தில் இடைக்கால அரசால் இந்து கோயில்கள் எரிப்பு, இந்து மக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் பிரச்சனை உருவாகும்போதெல்லாம் இந்து மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.
இந்து மக்களை காக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்றும், வங்கதேச இந்து மக்கள் உரிமைக்காக நடைபெறும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்பதகாவும் அவர் கூறினார்.
வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளலாம் என்றும், டிச.2-ல் கமலாலயத்திற்கு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் கரு.நாகராஜன் கூறினார்.