வங்க தேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தல்!
வங்க தேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் தத்தாத்ரேயா ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எந்தவொரு சமூகத்திற்கும் ஒற்றுமை அவசியம் என்றும், இன்று பல மதவாதிகளும் கட்சிக்காரர்களும் தங்கள் அனுபவத்தில் இருந்து அதை புரிந்துகொண்டு வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், இந்து ஒற்றுமை சமுதாயத்தில் இன்றியமையாதது மற்றும் பொது நலனுக்கு அவசியம் என்றும் அவர் கூறினார். சாதி மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்துக்களை பிளவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும், எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுககொண்டார்.
தொடர்ந்து பேசிய தத்தாத்ரேயா, வங்கதேச இந்துக்கள் புலம்பெயராமல் அங்கேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் எனவும் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறினார்.
சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு ஓடிடிக்கும் சான்றிதழ் வாரியங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.