வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேர் கைது - ராமநாதபுரம் காவல்துறை நடவடிக்கை!
01:17 PM Dec 27, 2024 IST | Murugesan M
ராமநாதபுரத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்துவந்த வடமாநில பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், பூந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரசாத், ராமநாதபுரம் முனியசாமி நகரில் தனது குடும்பத்தினருடன் சாலை ஓரத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
Advertisement
நேற்று முன்தினம் காரில் வந்த 3 பேர், தங்களை போலீஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, குறைந்த விலைக்கு பொருட்களை கேட்டுள்ளனர். இதற்கு, ராம் பிரசாத் மறுப்பு தெரிவிக்கவே, அவரை தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க வந்த அவரது மனைவியை ஆபாசமாக பேசியதோடு, அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement