குஜராத்தில் டாடா விமான வளாகம் - ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து தொடங்கி வைக்கிறார் மோடி!
பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்
வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் மோடியும் ஸ்பெயின் பிரதமரும் இணைந்து கூட்டாக திறந்து வைக்க உள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28ஆம் தேதி குஜராத் செல்கிறார். காலை 10 மணியளவில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் வளாகத்தில் சி-295 போர் விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை திறந்து வைக்கிறார்.
காலை 11 மணியளவில் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைக்கு செல்கிறார். வதோதராவிலிருந்து அம்ரேலி செல்லும் பிரதமர், அங்கு பிற்பகல் 2.45 மணிக்கு அம்ரேலியில் உள்ள துதாலாவில் பாரத மாதா சரோவாரைத் தொடங்கி வைக்கிறார்.
பிற்பகல் 3 மணியளவில், அம்ரேலியில் உள்ள லாத்தியில் ரூ .4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.