வந்தே பாரத் ரயில் இன்ஜின் புரோக்கிராம் மாற்றியமைப்பு - ஒப்பந்த ஊழியர் கைது!
வந்தே பாரத் ரயில் இன்ஜின் புரோக்கிராமை குடிபோதையில் மாற்றிய ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கோவையிலிருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவசர தேவை கருதி, வந்தே பாரத் மாற்று இன்ஜின் ஒன்று கோவை ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி காலையில் வந்தே பாரத் ரயில் இன்ஜினில் லோகோ பைலட்டுகள் தங்கள் பணியை வழக்கம் போல் தொடங்கினர். அப்போது, ரயிலில் புரோகிராம் மாற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ரயில்வே போலீசார், ஒப்பந்த ஊழியர் ஹரிகரன் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் குடிபோதையில் ரயில் இன்ஜின் புரோக்கிராமை மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெறுகிறது.
சரியான நேரத்தில் புரோகிராம் மாற்றியது லோகோ பைலட்டுகள் கண்டறிந்தால் அந்த ரயில் இன்ஜின் இயக்கத்திற்கும் கொண்டுவரும் முன்பே சரி செய்ய முடிந்தது மாறாக புரோகிராம் மாற்றப்பட்ட நிலையில் அந்த இன்ஜினை இயக்கத்திற்கு கொண்டு வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.