வயநாடு இடைத்தேர்தல் - 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி!
10:05 AM Nov 24, 2024 IST | Murugesan M
கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், கேரளாவின் வயநாடு தொகுதி முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏற்கனவே, இந்த தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி, எம்.பி பதவியை ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து, கடந்த 13-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
Advertisement
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரியும் போட்டியிட்டனர்.
6 லட்சத்து 22 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்ற பிரியங்கா காந்தி, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Advertisement
Advertisement