வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல் - பிரியங்கா காந்தி முன்னிலை!
வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா முன்னிலையில் உள்ளார் .
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி வயநாடு என இரு தொகுதியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து இடது சாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பா.ஜ., சார்பில் நவ்யாவும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அவர், 4 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.