வரி உயர்வுக்கு எதிர்ப்பு - திருப்பூரில் கடையடைப்பு போராட்டம்!
திருப்பூரில் வரி உயர்வை கண்டித்து சுமார் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
Advertisement
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து வணிகர் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள கடை அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
குறிப்பாக பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் காதர்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மளிகைக் கடைகள் தொடங்கி துணிக்கடைகள், நகைக்கடைகள் என சுமார் 1 லட்சம் கடைகள் வரை அடைக்கப்பட்டுள்ளதால் ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.