செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வரி ஏய்ப்பு புகார் - சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

03:05 PM Nov 11, 2024 IST | Murugesan M

இரு தனியார் சோலார் நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒ.பி.ஜே மற்றும் பி-விண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு தனியார் சோலார் நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சோலார் பேனல் மற்றும் காற்றாலைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததில், மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்ததாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் புகார்கள் குவிந்தன.

Advertisement

அதனடிப்படையில் சென்னை உட்பட அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  ஆந்திராவில் உள்ள இந்நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Advertisement
Tags :
Enforcement departmentFEATUREDMAHARASHTRAMAINOBJP-Wind Energy Pvt Ltdprivate solar companies.raid in 15 locations
Advertisement
Next Article