வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் என புகார் : திருத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
03:58 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
ஏர்வாடி அருகே உள்ள ஊரின் பெயர் வரி ரசீதில் தவறாக உள்ளதாகவும், அதனை மாற்றித் தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
Advertisement
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகாவில் உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், தங்கள் ஊரின் பெயர் 'பிச்சை மூப்பன் வலசை' என்றுதான் அரசு ஆவணங்கள், பதிவேடுகளில் உள்ளதாகவும், ஆனால் வீட்டு வரி ரசீதில் பிச்சையப்பன் வலசை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையீட்டு ஊர்ப் பெயரைத் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Advertisement