வரும் 1ஆம் தேதி முதல் புதிய படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம்! - தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்!
06:27 PM Oct 29, 2024 IST
|
Murugesan M
நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Advertisement
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பணச்சுமை ஏற்படுவதாக கூறி நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படப்பிடிப்புகளை துவங்க வேண்டாம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்னதாக வலியுறுத்தி இருந்தது.
இதுதொடர்பாக பெஃப்சி யூனியன் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
எனவே, நவம்பர் 1ம் தேதி முதல் புதிய படங்களுக்கான படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Advertisement