வரும் 25-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!
12:10 PM Nov 22, 2024 IST
|
Murugesan M
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
Advertisement
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 16 மசோதாக்கள் மட்டுமன்றி 2024-25ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட துணை மானிய கோரிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
வக்ஃபு திருத்த மசோதா உள்ளிட்ட 8 பிற மசோதாக்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு மக்களவையில் நிலுவையில் இருப்பவை. குறிப்பாக வக்ஃபு திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement
இகுழுவின் அறிக்கை குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்துக்குள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Next Article