வர்த்தக போரில் யாரும் வெற்றி காண்பதில்லை : அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை!
05:29 PM Apr 06, 2025 IST
|
Murugesan M
வர்த்தக போரில் யாரும் வெற்றி காண்பதில்லை என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Advertisement
சர்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்குப் பரஸ்பர வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கையெழுத்திட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த உத்தரவானது பின்தங்கியுள்ள நாடுகளை மிகவும் பாதிக்கும் எனத் தெரிவித்தார். வர்த்தக மோதலானது ஐ.நாவின் முன்னேற்றத்திலும் எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
Advertisement
Advertisement