செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பட்ஜெட் : எல். முருகன் நம்பிக்கை!

01:30 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என மத்திய அமைச்சர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக தொழில் தொடங்கும் பட்டியலின சமூக இளைஞர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மீனவர்கள், பால் வியாபாரிகளுக்கு கிஷான் கிரெடிட் அட்டை மூலம் மூன்று லட்சம் முதல் 5 லட்ச ரூபாய் வரை கடனுதவி கிடைக்க பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை வரவேற்ற மத்திய அமைச்சர் எல். முருகன், 12 லட்ச ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Budget to build a developed India: L. Hope Murugan!centeral minister l muruganMAIN
Advertisement