செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வளர்ச்சியின் பாதையில் இந்தியா : மத்திய பட்ஜெட்டில் இடம்பெற போகும் அறிவிப்புகள் என்ன?

09:05 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பணவீக்கம் 4.6 சதவீதமாகவும் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 4 சதவீதமாகவும் ஆகவும் இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
அது பற்றிய செய்தி தொகுப்பு.

Advertisement

2047ம் ஆண்டுக்குள், 'விக்சித் பாரத்' என்ற இலக்கை அடைய, இன்னும் 22 ஆண்டுகளே உள்ளன. இந்தச் சூழலில், வளர்ச்சியில் தேக்கம், பணவீக்கம் மற்றும் நடுத்தர குடும்பங்களின் மீதான நிதி நெருக்கடி ஆகியவை கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.

ரூபாய் பலவீனமடைதல், குறைந்து வரும் அந்நிய முதலீடு மற்றும் நிலையற்ற பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய பொருளாதார ஆபத்துகளாகும்.

Advertisement

பணவீக்கம் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, மக்களின் வாங்கும் திறன் குறைவு என்னும் பொருளாதாரச் சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பட்ஜெட் மிக முக்கியமானது ஆகும். பட்ஜெட் தான் நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றாலும், மக்களின் நிதி ஆதாரத்துக்கு ஆதரவான பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சில்லறை பணவீக்கம் பல மாதங்களாக, மத்திய ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால சகிப்புத்தன்மை அளவான 4 சதவீதத்தைத் தாண்டி வருகிறது. குறைந்த சம்பள வளர்ச்சியால், நடுத்தரக் குடும்பங்கள், தங்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவைக் குறைக்க வேண்டியுள்ளது.

2025-2026 ஆம் ஆண்டு, முதல் காலாண்டில்,பணவீக்கம் 4.6 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி, 6.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருத்தைத் தெரிவித்துள்ள, மூடிஸ் நிறுவனத்தின், இணை பொருளாதார நிபுணர் அதிதி ராமன், வளர்ச்சியை சமநிலைப்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்துதல், ஆகிய கடுமையான சவால்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் உள்நாட்டு தேவையை, குறிப்பாக முதலீட்டை ஆதரிக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில், நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்துக்கும் குறைவான இருக்கும் என்றும் மூடிஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாகக் குறையும் என்று கணித்துள்ள மூடிஸ் அறிக்கை, அதற்கு, மத்திய அரசு தனது நிதி மற்றும் பொருளாதார கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை மாற்றங்களால், ரூபாயின் மதிப்பு கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும் மூடீஸ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதும், முதலீட்டாளர்கள் இந்திய சொத்துக்களை விற்று, அதிக லாபம் ஈட்டியதும் ரூபாயின் மதிப்பை அதிகரித்தது.

இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு ட்ரம்ப் அதிக வரி விதிக்கும் நிலையில், ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும். அதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடை ஏற்படலாம் என்றும் மூடீஸ் அறிக்கை குறிப்பிடுகிறது.

2025 ஒரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வளர்ச்சி குறைந்து வருகிறது, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. மேலும் பணவீக்கமும் அதிகரிக்க உள்ளது.

அதிக பணவீக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும் வகையில், வருமான வரி விகிதங்களைக் குறைக்கவும், விலக்கு வரம்பை அதிகரிக்கவும் பட்ஜெட்டில் முக்கிய அறிப்புகள் வெளியாகலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINPM ModiIndiaNirmala Sitharamanunion budgetIndia on the road to growth: What are the announcements to be made in the Union Budget?FEATURED
Advertisement