வளர்ந்த இந்தியா இலக்கை அடைய மத்திய அரசு அடித்தளம் - நிர்மலா சீதாராமன் பேச்சு!
09:21 AM Mar 23, 2025 IST
|
Ramamoorthy S
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியா எனும் இலக்கை அடைய இன்னும் 22 ஆண்டுகள் உள்ளதாகவும், பல நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisement
"அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 28 நகரங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் 16 லட்சம் குடிநீர் இணைப்புகளை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் கூறினார்
Advertisement