நெல்லை வள்ளியூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்!
04:50 PM Dec 22, 2024 IST | Murugesan M
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில், 45 பேர் அதில் பயணித்தனர்.
Advertisement
வள்ளியூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் முருகேசன் உள்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement