செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு : 18-ம் தேதி ஆலோசனை!

11:12 AM Mar 16, 2025 IST | Murugesan M

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக வரும் 18-ம் தேதி உள்துறை செயலாளருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisement

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

இதனடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்படாமல் இருந்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டமானது வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement
Tags :
FEATUREDMAINVoter card - Aadhaar linking: Consultation on the 18th!ஆதார் இணைப்புவாக்காளர் அட்டை
Advertisement
Next Article