வாயு கசிவு பள்ளியில் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு!
10:49 AM Nov 12, 2024 IST | Murugesan M
சென்னை திருவொற்றியூரில் கடந்த 25-ம் தேதி தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலத்தில் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கடந்த 17 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெற உள்ளதால், பள்ளியை திறக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினர், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement