வாரவிடுமுறை : பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
03:13 PM Feb 02, 2025 IST
|
Murugesan M
வாரவிடுமுறையையொட்டி உதகை பைக்காரா படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
Advertisement
உதகையில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே உள்ள அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம்.
அந்த வகையில், வார விடுமுறையையொட்டி பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
Advertisement
மோட்டார் படகுகள், அதிவேக படகுகள், ஸ்கூட்டி படகுகளில் குடும்பத்தினருடன் சவாரி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உதகையில் நிலவும் இதமான காலநிலையில் அதிவேக படகுகளில் சவாரி செய்தது மகிழச்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement