வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் - தமிழக அரசு தகவல்!
01:40 PM Dec 21, 2024 IST
|
Murugesan M
வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகள் முடிந்த பின்பே உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முனியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வார்டு எல்லை மறுவரையறை, SC, ST மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்த பிறகே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
Advertisement
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வார்டு மறுவரையறை, SC, ST மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல் அறிவிப்பு வெளியாகாது என தமிழக அரசு விளக்கம் அளித்தது. இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தனர்.
Advertisement
Next Article