வார விடுமுறை - திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
02:00 PM Dec 28, 2024 IST
|
Murugesan M
விடுமுறை தினத்தையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Advertisement
காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயில் உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது. வார விடுமுறை தினத்தையொட்டி கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
அந்த வகையில் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்த பின்னணி பாடகர் மனோ, சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது பக்தி பாடல்களை பாடி சனீஸ்வர பெருமானை அவர் வழிபட்டார்.
Advertisement
இதையடுத்து சனீஸ்வர பெருமானுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் அதிகமான கூட்டம் காணப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Advertisement