செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விகடன் குழுமம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அண்ணாமலை கடிதம்

08:05 PM Feb 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பிரதமர் மோடியை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் விகடன் குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

பத்திரிகை சுதந்திரம் என்ற பெயரில் திமுக அரசின் ஊதுகுழலாக செயல்படும் விகடன் குழுமம்  வேண்டுமென்றே பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் விகடன் குழுமம், அநாகரிகமான முறையில் கேலி சித்திரங்களை வெளியிடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி நடத்திய ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை இழிவுபடுத்தி, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிகளை, விகடன் குழுமம் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே விகடன் குழுமம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சருக்கு எல்.முருகனுக்கு எழுதியது போல், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா  தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேஷாய்க்கும் அண்ணாமலை புகார் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement
Tags :
Action should be taken against Vikatan Group: Annamalai letter to Union Minister L. MuruganMAINbjp k annamalaibjp l murugan
Advertisement