விக்கிரவாண்டி தவெக மாநாடு - முக்கிய நிகழ்வுகள்!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த 6 மாதமாக பேசு பொருளாக இருந்த நிலையில், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற கொள்கை அறிவிப்பு மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
Advertisement
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் பிற்பகல் 3.15 மணியளவில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநாட்டு மேடையில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வள்ளிக் கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
சரியாக மாலை 4 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கரவொலி எழுப்பி விஜய்யை வரவேற்றனர்.....
மேடைக்கு வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி கையசைத்த விஜய், பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த Ramp தளத்தில் நடந்து சென்றார். அப்போது விஜய்யை நோக்கி தொண்டர்கள் சிலர் கட்சி சின்னம் பொறித்த துண்டை வீசினர்.
Ramp மீது விழுந்த கட்சித் துண்டை எடுத்து தனது தோளிப் போட்டுக் கொண்டே நடந்து சென்ற விஜய், தொண்டர்களை பார்த்து கையசைத்து மீண்டும் மேடைக்கு திரும்பினார்...
அதன் தொடர்ச்சியாக கட்சியின் கொள்கைத் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப் போர் தியாகிகளுக்கு மேடையில் மரியாதை செலுத்தினார் விஜய்....
சரியாக மாலை 4.25 மணிக்கு 101 அடி உயர கொடிக் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றினார்.
மாலை 4.30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மாநாட்டில் ஒலித்தது....
அதன் தொடர்ச்சியாக த.வெ.க. பொருளாளர் வெங்கட் ராமன் உறுதி மொழியை வாசிக்க, தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் உறுதி ஏற்றனர்.
மாநாட்டுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக பொதுச் செயலாளர் புதுவை என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.
அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டது....