செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது - உயர் நீதிமன்றம் மறுப்பு!

02:52 PM Jan 22, 2025 IST | Sivasubramanian P

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பரப்புரை மேற்கொண்ட சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் முன்னலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisement

மேலும், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடிவாரண்டை திரும்பப் பெறக்கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement
Tags :
defamed former Prime Minister Rajiv Gandhi.madras high courtMAINNaam Tamilar katchiseemanVikravandi by election
Advertisement
Next Article