செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

10:40 AM Dec 20, 2024 IST | Murugesan M

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் தந்தை அருள் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது மனைவி மரணமடைந்து விட்டதாகவும் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக தனது மகனுக்கு அவசர கால விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

Advertisement

இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பை சிறைத்துறை அதிகாரிகள் வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும், நீதிமன்றங்களை அணுகி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணைக் கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழந்தால் அவர்களால் இறுதிச் சடங்கில் எப்படி பங்கேற்க இயலும்? என கேள்வி எழுப்பினர்.

உரிய நிபந்தனைகளுடன் சிறைத்துறை அதிகாரிகளே அவசரக்கால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement
Tags :
FEATUREDgrant emergency leavemadras high courtMAINPrisonerstamil nadu government
Advertisement
Next Article