விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் - தடையை மீறி தேமுகவினர் பேரணி!
11:14 AM Dec 28, 2024 IST | Murugesan M
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி சென்றனர்.
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேட்டில் கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்தில் தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Advertisement
இதனிடையே, தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை அமைதிப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றுகூறி பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால் அதிருப்தியடைந்த தொண்டர்கள் போலீசாரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement