விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா கருத்து!
விஜய் கட்சி ஆரம்பித்துள்ளது அவசியமா? அவசியமற்றதா? என தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Advertisement
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது பாண்டியர்களின் 223வது குரு பூஜையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்திய பின், அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.
அரசியலில் மக்கள் சேவையாற்ற யார் வந்தாலும் அந்த எண்ணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். விஜயின் கொள்கை என்ன? சித்தாந்தம் என்ன? தேசிய பாதையில் போகப் போகிறாரா? அல்லது மாநில வாதம் பேசப்போகிறாரா? என அவர் கொள்கையை தெரிவித்த பிறகு தான் தெரியவரும்.
பெரியாரின் படத்தை வைத்திருப்பதால் அங்கு தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் இடம் இல்லை எனவே கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஆளுநருக்கு மன்னிப்பு மட்டும் தான் தெரியும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த அவர், தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் குளறுபடி பண்ணியது உதயநிதி ஸ்டாலின் என தெரிவித்தார். தேசியத்தை பெரிதாக கருதுவர்கள் மட்டுமே தமிழ் தாய் வாழ்த்தை மதிப்பார்கள் என்றார்.
மேலும் தூர்தர்ஷன் விழாவில் ஆளுநர் பாடவில்லை தூர்தர்ஷன் பணியாளர்கள் தான் பாடினார்கள் ஆனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என முதல்வர் கூறினர். இப்போது உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியிலிருந்த முதல்வர் ஸ்டாலின் நீக்குவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் சத்தியேந்திரன் உடனிருந்தனர்.