விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது - முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!
நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும், வரும் 2026-இல் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் வீராங்கனைகள்
ஆலோசனை கூட்டத்தில் முன்னால் அமைச்சர் பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திமுகவில் உள்கட்சி பூசல் வெடிக்கும் போது தமிழகத்திலேயே அக்கட்சி இல்லாத நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அவரை பார்த்து திமுகவிற்கு பயம் உள்ளது. நாங்கள் தனித்து 2026 இல் ஆட்சி அமைப்போம்
என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய் திராவிட மாடலை எதிர்த்தால் அவரிடம்தான் கேட்க வேண்டும். திராவிடம் என்பதை உருவாக்கியவர் பெரியார். திராவிட மாடல் என்பதெல்லாம் இல்லை. எங்களுக்கு எம்ஜிஆர் மாடல், அம்மா மாடல், இபிஎஸ் மாடல் தான் என பொன்னையன் தெரிவித்தார்.