விஜய் திவாஸ் தினம்! : ராணுவ அதிகாரிகள் மரியாதை!
12:21 PM Dec 16, 2024 IST | Murugesan M
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெற்று 53 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மூத்த ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
1971ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் வெற்றிபெற்ற நிலையில், ஓவ்வொரு ஆண்டும் "விஜய் திவாஸ்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 53 ஆண்டு விஜய் திவாஸ் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
Advertisement
இந்நிகழ்வையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர்நினைவு சின்னத்திற்கு வந்த மூத்த அதிகாரிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினருடன் வருகை தந்து மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement