விஜய் தேர்ந்த பயிற்சி எடுத்து மாநாட்டில் பேசியிருந்தாலும் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை! - எல்.முருகன்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்ந்த பயிற்சி எடுத்து மாநாட்டில் பேசியிருந்தாலும் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை ஐ.சி.எப் வளாகத்தில் நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியபின் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேசியத்தையும் தெய்வீகத்தையும் குழப்பான சூழலை எதிர் கொண்டிருப்பதாகவும் இருந்தாலும், அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
போலி திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதையே விஜய் மாநாட்டில் பேசியிருப்பதாகவும். இந்த நாட்டில் குடும்ப அரசியல் தேவையில்லை என்பதே அனைவரின் எண்ணம் எனவும் அவர் பேசினார். தேசியமும், தெய்வீகமும் பாஜகவின் கொள்கை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்டிருப்பதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
சிவகாசி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசுகளை வெடிக்கச் சொல்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய எல்.முருகன், திமுக எனும் நரகாசூரனையும் விரைவில் அழிக்கப்போகிறோம் எனவும் தெரிவித்தார்.