செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்!

03:42 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

Advertisement

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார், விசிகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்துக்கு வந்த அவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைவது ஏற்கெனவே உறுதியான நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அதிமுக நிர்வாகியாக இருந்த நிர்மல் குமாரும் தவெக பக்கம் தாவியுள்ளார்.

Advertisement

இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமார், கடந்த 2023-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்திருந்தார்.

தவெகவில் 3 துணை பொதுச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனா பதவி குறித்த அறிவிப்போடு, புது நிர்வாகிகள் நியமனம் பற்றிய அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Tags :
Aadhav Arjuna and Nirmal Kumar joined TVK in the presence of Vijay!actor vijayMAINtvk partytvk vijay
Advertisement